வெளுத்து வாங்கிய கனமழை..! - வீடுகளுக்குள் மழைநீர் புகுந்த‌தால் மக்கள் அவதி

x

வெளுத்து வாங்கிய கனமழை..! - வீடுகளுக்குள் மழைநீர் புகுந்த‌தால் மக்கள் அவதி

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே, வீடுகளுக்குள் மழைநீர் புகுந்த‌தால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். படூர் ஊராட்சிக்கு உட்பட்ட ராதாகிருஷ்ணன் நகர், வேம்புலி அம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 2 நாட்களாக மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், சாலையின் நடுவே பள்ளம் வெட்டி மழைநீரை வெளியேற்றும் பணியில் ஊராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளதால், வீட்டில் உள்ள பொருட்கள் நனைந்து சேதமடைந்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்