ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள்...அள்ளி கொண்டு வந்து மொத்தமாக அழிப்பு

x

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் ரசாயனம் தெளித்து பழுக்க வைக்கப்பட்ட 5270 கிலோ மாம்பழங்கள் அதிகாரிகள் முன்னிலையில் அரியமங்கலம் குப்பை கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டது. திருச்சி மாம்பழச் சாலையில் ரவிச்சந்திரன் என்பவர் மாம்பழங்கள் மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரம் செய்து வருகிறார். இவரது மாம்பழ குடோனில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ் பாபு தலைமையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது ரசாயனம் தெளித்து மாம்பழங்கள் பழுக்க வைத்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. இதனை அடுத்து 5270 கிலோ எடையுள்ள மாம்பழங்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். உணவு பகுப்பாய்வுக்காக சென்னை ஆய்வாக கூடத்திற்கு இரண்டு மாதிரிகளை அனுப்பி வைத்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மாம்பழங்கள் அரியமங்கலம் குப்பை கிடங்கில் கொண்டு சென்று அதிகாரிகள் முன்னிலையில் அழிக்கப்பட்டது. இது போன்று சட்ட விரோதமாக பொதுமக்களுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் ரசாயனம் கலந்து உணவு பொருட்களை விற்பனை செய்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்