சினிமா பைனான்சியரிடம் செக் மோசடி.. உதயம் தியேட்டரின் முன்னாள் உரிமையாளர் அதிரடி கைது

x

செக் மோசடி வழக்கில், சென்னை உதயம் திரையரங்கு முன்னாள் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

கடந்த 2002 ஆம் ஆண்டு, ராஜீவ்காந்தி கல்வி அறக்கட்டளை நிர்வாகிகளான முன்னாள் காங்கிரஸ் எம்பி இரா அன்பரசு, அவரது மனைவி மற்றும் உதயம் தியேட்டர் உரிமையாளராக இருந்த மணி ஆகியோரிடம், சினிமா பைனான்சியர் போத்ரா என்பவர், 35 லட்ச ரூபாய் பணம் கடனாக கொடுத்துள்ளார். பணத்தை திருப்பிக் கொடுக்காததால், முன் தேதியிட்டு கொடுக்கப்பட்ட செக் வங்கியில் செலுத்தும் போது, பணம் இல்லாமல் திரும்பி வந்துள்ளது. இது தொடர்பாக கீழமை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், 2015 ஆம் ஆண்டு இரா அன்பரசு, அவரது மனைவி மற்றும் உதயம் தியேட்டர் உரிமையாளராக இருந்த மணி ஆகியோருக்கு, 2 ஆண்டுகள் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில், உயர்நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்தது. ஆனால், தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் எம்பி இரா அன்பரசு மற்றும் அவரது மனைவி காலமானதால், உதயம் தியேட்டர் உரிமையாளராக இருந்த மணி என்பவரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்பேரில், மணியை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்