பட்டப்பகலில் உரிமையாளரை... சுட்டு கொன்று நகைகள் கொள்ளை

x

பட்டப்பகலில் உரிமையாளரை... சுட்டு கொன்று நகைகள் கொள்ளை

சட்டீஸ்கர் மாநிலம் தூர்க் மாவட்டத்தில் பட்டப்பகலில், நகைக்கடை உரிமையாளரை சுட்டு கொன்று பணம் நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தூர்க் மாவட்டத்தில் சுரேந்திர சோனி என்பவருக்கு சொந்தமான நகை கடைக்கு இரு நபர்கள் பைக்கில் வந்தனர். இருவரும், நகை வாங்க வந்தது போல் நடித்து நகைகளை காட்டுமாறு தெரிவித்துள்ளனர்.

சுரேந்திர சோனி நகைகளை எடுத்துக் கொண்டிருக்கும் போதே திடீரென துப்பாக்கி எடுத்த மர்ம நபர்கள், அவரை சுட்டுக் கொன்று விட்டு அங்கிருந்த பணம் தங்கம் வெள்ளி நகைகளை கொள்ளை அடித்து விட்டு தப்பி சென்றனர்.

தகவலின் பெயரில் உடனடியாக சோனியின் குடும்பத்தார் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று நிலையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்