யூபிஐ மூலம் பணம் செலுத்த கட்டணமா? - மத்திய நிதித்துறை அமைச்சகம் விளக்கம்

x

யூபிஐ மூலம் பணம் செலுத்த கட்டணம் விதிக்கும் திட்டம் இல்லை என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு முதல், கடந்த ஜூலை வரை 6 பில்லியன் பணப் பரிவர்த்தனைகள் யூபிஐ மூலம் நடைபெற்றுள்ளதாக பிரதமர் மோடி அண்மையில் கூறியிருந்தார். இந்நிலையில், யூபிஐ மூலம் பணம் பரிமாற்றம் செய்வதற்கு கட்டணம் வசூலிக்க அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் பரவியது. ஆனால், கட்டணம் விதிப்பது குறித்து அரசு பரிசீலிக்கவில்லை என மத்திய நிதியமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், டிஜிட்டல் பரிவர்த்தனையை தொடர்ந்து ஊக்குவிக்கப்படும் என விளக்கமளித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்