"ஊழியர்களின் பணி நேரம் மாற்றம்" - பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு

x

அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் பணி நேரத்தை மாற்றம் செய்து பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களான உதவியாளர், இளநிலை உதவியாளர்களின் வேலை நேரமானது காலை 9 மணி முதல், மாலை 4.45 மணி வரையில் மாற்றி அமைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

பள்ளி வருகைப் பதிவேட்டை முடித்தல், ஆசிரியர்களின் விடுப்புகளை குறித்தல், பிற அலுவல் பணிகளை மேற்கொள்வதில் ஏற்பாடும் நிர்வாக குறைபாடு சரி செய்யும் வகையில் பணி நேரம் மாற்றப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளின் நிர்வாக மேம்பாட்டிற்காக ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் பங்களிப்பு இன்றியமையாதது என்பதால் பணி நேரம் மாற்றம் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்