திருப்பதி லட்டில் மாற்றம் - தேவஸ்தானம் அதிரடி முடிவு

x

இயற்கை விவசாயம் மூலம் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு, லட்டு பிரசாதம் தயாரிக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் ஆலோசனை கூட்டம், தலைவர் சுப்பாரெட்டி தலைமையில், திருப்பதி மலையில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பாரெட்டி, கோடை விடுமுறை காலத்தில் சாதாரண பக்தர்கள் வருகை அதிகம் இருக்கும் என்பதால், விஐபி பிரேக் தரிசன டிக்கெட் எண்ணிக்கையை வெகுவாக குறைத்துள்ளதாகத் தெரிவித்தார். இயற்கை விவசாயம் மூலம் விளைவிக்கப்படும் பொருட்களை தொடர்ந்து கொள்முதல் செய்யவும், அந்த பொருட்களை பயன்படுத்தி லட்டு பிரசாதம் தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். டெல்லியில் உள்ள ஏழுமலையான் கோயிலில், மே மாதம் மூன்றாம் தேதி துவங்கி 16ஆம் தேதி வரை திருப்பதி மலையில் நடைபெறுவது போல் பிரமோற்சவம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக, சுப்பாரெட்டி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்