தமிழக அமைச்சரவையில் மாற்றம்... பிடிஆரின் இலாகா மாறுகிறதா? இன்று வெளியாகும் அறிவிப்பு...

x

புதிய அமைச்சராக டிஆர்பி ராஜா இன்று பதவியேற்க உள்ள நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு பதவியேற்ற 2 ஆண்டுகளில், மூன்றாவது முறையாக அமைச்சரவை மாற்றம் நடைபெறுகிறது. இந்த முறை அமைச்சர் நாசர் அமைச்சரவையில் இருந்து முதல் நபராக நீக்கப்பட்டு, டிஆர்பி ராஜாவுக்கு புதிதாக அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. டிஆர்பி ராஜா-விற்கு எந்த துறை ஒதுக்கப்பட்டுள்ளது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. மேலும், புதிய அமைச்சர் பதவியேற்புக்கு பின்னர், தமிழ்நாடு அமைச்சரவையில் இலாகா மாற்றம் செய்யப்பட்ட, புதிய அமைச்சரவை பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது..


Next Story

மேலும் செய்திகள்