தமிழகத்தில் தலைகீழான மாற்றம்.. அரசு பள்ளிகளில் 'சீட்' வாங்க டிமாண்ட் - அடித்து கொள்ளும் பெற்றோர்கள்
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மும்முரமாக நடந்து வரும் நிலையில், சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சீட் வாங்குவதற்கு கடும் போட்டி எழுந்துள்ளது.
தற்போது மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ள நிலையில், அரசு பள்ளிகளில் பெற்றோர்கள் கூட்டம் அலை மோத தொடங்கியுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு இணையான உள்கட்டமைப்பு வசதி மற்றும் தரமான கல்வி வழங்குவதே அதற்கு காரணம் கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவிகளை சேர்ப்பதற்கு இரண்டு நாட்களாக பெற்றோர் கூட்டம் அலைமோதுகிறது. ஆறாம் வகுப்பு மற்றும் 11 வகுப்புகளில் மாணவிகளை சேர்ப்பதற்கு பெற்றோர் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். விண்ணப்பங்களை பெறுவதற்காகவே தனியாக டோக்கன் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த டோக்கன்களை பெறுவதற்காகவே நூற்றுக்கணக்கான பெற்றோர் தினமும் பள்ளியில் குவிந்து வருகின்றனர்.
