சந்திரயான் 3..மாத இறுதிக்குள்..வெளியான பரபரப்பு தகவல் | Chandraayan 3 | spaceship

x

சந்திராயன் மூன்று விண்கலத்தை புவி வட்ட பாதையில் இருந்து நிலவு வட்ட பாதை நோக்கி இயக்க, ஐந்தாவது உந்து விசை இன்று அளிக்கப்பட உள்ளது...

கடந்த 15ஆம் தேதி முதல், பூமியை சுற்ற தொடங்கிய சந்திரயான் மூன்று விண்கலம், புவிவட்ட பாதையில் இறுதிச்சுற்றை இன்று தொடங்க உள்ளது.

தற்போது விண்கலத்தின் ஐந்தாவது சுற்றுக்கான உந்துவிசை இன்று பிற்பகல் இரண்டு மணி அளவில் இஸ்ரோ சார்பில் அளிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம், இந்த விண்கலம் ஜூலை 31-ஆம் தேதிக்குள் 5-வது சுற்றை நிறைவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து சந்திரயான் மூன்று விண்கலம் டிரான்ஸ்-லூனார் என்று சொல்லப்படும் புவி பாதையில் இருந்து நிலவு வட்ட பாதையை நோக்கிய பயணத்தில் இயங்கவுள்ளது. இதற்காக, விண்கலம் புவியீர்ப்பு விசைக்கும், நிலவின் ஈர்ப்பு விசைக்கும் இடைப்பட்ட சமப்புள்ளியில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி நிறுத்தப்பட உள்ளது. நிலவிலிருந்து சுமார் 62 ஆயிரத்து 630 கி மீட்டர் தொலைவில் உள்ள சமவிசை புள்ளிக்கு வின்கலத்தை வெற்றிகரமாக செலுத்துவதன் மூலம், சந்திரயான் மூன்று விண்கலம் இம்மாத இறுதியில் தனது 50 சதவீத பணியை நிறைவு செய்ய உள்ளது


Next Story

மேலும் செய்திகள்