கிளைமேக்ஸை நெருங்கியது சந்திரயான் -3.. "அந்த" அதிசயம் நள்ளிரவில் நடக்கும்..! -நெஞ்சை பிடித்திருக்கும் இஸ்ரோ.. திக்..திக்..நொடி.. இது மட்டும் நடந்துவிட்டால்..

x

நிலவை நோக்கிய சந்திரயான் 3 விண்கல பயணம் குறித்த தொகுப்பு உங்கள் பார்வைக்கு...

ஹரிகோட்டாவில் இருந்து கடந்த 14 ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் புவி நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது.

புவி நீள்வட்டப்பாதையில் 5 முறை சுற்றும் பின்னர் நிலவின் சுற்றுப்பாதைக்கு விண்கலம் செல்லும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. புவி நீள்வட்டப்பாதையில் ஒவ்வொரு சுற்றாக உந்து விசை வாயிலாக விண்கலம் உயர்த்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 5 ஆவது நீள் வட்டப்பாதைக்கு விண்கலம் உயர்த்தப்பட்டுள்ளது. இப்போது பூமிக்கு அருகே 236 கிலோ மீட்டர் வரும் விண்கலம், பூமிக்கு அப்பால் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 609 கிலோ மீட்டர் தொலைவுக்கு செல்லும்...

இந்த 5-ஆவது புவி நீள்வட்டப்பாதையை விண்கலம் சுற்றுகையில், நிலவின் ஈர்ப்பு விசைக்குள் உந்தி தள்ளப்படும். அதாவது புவி ஈர்ப்பு விசையில் இருந்து நிலவின் ஈர்ப்பு விசைக்குள் விண்கலம் செல்லும்...

இந்த நகர்வு ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி நள்ளிரவு இருக்கும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலவை நோக்கிய சந்திரயான் 3 விண்கலத்தின் முக்கிய நகர்வு இதுவாகும்...

பூமியின் ஈர்ப்பு விசையும், நிலாவின் ஈர்ப்பு விசையும் சந்திக்கும் பகுதியிலே விண்கலத்தை நிலவுக்கு பாதை மாற்ற முடியும். அதாவது நிலவின் சுற்றுப்பதைக்கு அனுப்ப முடியும்.

அந்த சம ஈர்ப்பு விசைப்புள்ளியானது, நிலவிலிருந்து 62 ஆயிரத்து 630 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. அந்த பாதையை எட்டியதும் உந்துவிசையை கொடுத்து விண்கலத்தை இயக்க வேண்டும். அப்படி செல்லும் போது மீண்டும் பூமியின் சுற்றுப்பாதைக்கு வந்துவிடாத வகையில், கொஞ்சம் கொஞ்சமாக பூமியைவிட்டு விண்கலத்தை விலக்க வேண்டும்.

பின்னர் நிலவின் சுற்றுப்பாதையில் சரியாக விண்கலத்தை உந்துசக்தி கொடுத்து சுற்ற வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி சுற்றுகையில் நிலவில் தரையிறங்கும் பகுதியை அடையாளம் கண்டு, விண்கல லேண்டரை தரையிறங்கும் முயற்சி தொடங்கப்படும்... ஆகஸ்ட் 23 ஆம் தேதி இந்த தலையாய பணியை இஸ்ரோ மேற்கொள்கிறது.


Next Story

மேலும் செய்திகள்