"அடுத்த இரு தினங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு" - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

x

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அடுத்த 2 தினங்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

இன்று டெல்டா மாவட்டங்கள், கடலூர், தேனி, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், காரைக்காலில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று தெற்கு வங்கக்கடல், தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடலில் பலத்த காற்றும்,

இன்றும் நாளையும் வட ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்றும் வீசக்கூடும்.

நாளை, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்