"ஷமிக்கு சவால் அளித்தேன்" - மனம் திறந்த ரோகித் சர்மா

x

முகமது ஷமிக்கு சவால் தரும் வகையிலே கடைசி ஓவரை அவரிடம் வழங்கியதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறி உள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஷமி வீசிய கடைசி ஓவரில் மட்டும் 4 விக்கெட்டுகள் வீழ்ந்தன. இதனால் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. போட்டிக்கு பிறகு ஷமி குறித்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா, நீண்ட நாட்களுக்குப் பிறகு அணிக்கு திரும்பிய ஷமிக்கு சவால் அளிக்க விரும்பியதாகவும், அதனால்தான் ஆட்டத்தின் கடைசி ஓவரை அவரிடம் அளித்ததாகவும் கூறி உள்ளார். கடைசி ஓவரில் ஷமி என்ன செய்தார் என்பதை எல்லோரும் பார்த்ததாகவும் ரோகித் சர்மா மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்