நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு - பரபரப்பு சிசிடிவி காட்சிகள் | chain snatching

நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு - பரபரப்பு சிசிடிவி காட்சிகள் | chain snatching
x

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில், சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 12 சவரன் தங்க செயின் மற்றும் கம்மல் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. வந்தவாசி பகுதியில், சென்னையில் பணிபுரியும் காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திரனின் மனைவி அனுசியா, திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரவு 10 மணி அளவில் நடந்து வந்துள்ளார். அப்போது, பின்னால் வந்த மர்ம நபர், அனுசியாவின் கழுத்தில் இருந்த 12 சவரன் தங்க செயின் மற்றும் காதில் இருந்த கம்மலை பறித்து சென்றார். இது தொடர்பான புகாரில், சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரித்த போலீசார், செயின் பறிப்பில் ஈடுபட்ட சங்கர் என்பவரை கைது செய்தனர்.Next Story

மேலும் செய்திகள்