"கடைசி வரை நிரப்பாத மத்திய அரசு" - தமிழகத்தில் MBBS இடங்கள் வீணாகும் அபாயம்...? | MBBS

x

தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில், மத்திய அரசுக்கு ஒதுக்கப்பட இடங்களில் 6 இடங்கள் நிரப்பப்படாமல், காலியாக தொடர்கின்றன.

தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ் பட்டப்படிப்பிற்கான இடங்களில் 15 சதவீத இடங்கள் மத்திய அரசுக்கு ஒதுக்கப்படுகின்றன.

2022இல் மத்திய் அரசுக்கு ஒதுக்கப்பட்ட சுமார் 800 இடங்களை நிரப்ப கடைசி தேதியான டிசம்பர் 29 முடிவடைந்துள்ள நிலையில்,

6 இடங்களை மத்திய அரசு கடைசி வரை நிரப்பாததால், அவை வீணாகும் அபாயம் உருவாகியுள்ளது.

சென்னை மருத்துவ கல்லூரியில் ஒரு இடமும், ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் ஒரு இடமும்,

மதுரை, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மருத்துவ கல்லூரிகளில் தலா ஒரு இடமும் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.

நான்கு கட்ட கலந்தாய்வுகளுக்கு பிறகும், இந்த ஆறு இடங்களை மத்திய அரசினால் நிரப்ப முடியவில்லை.

2020 வரை இரண்டு கட்ட கலந்தாய்வுகளுக்கு பிறகு, காலியாக உள்ள இடங்களை தமிழக அரசிடம் மத்திய் அரசு ஒப்படைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்