ஆங்கிலம், இந்தியில் மத்திய ரிசர்வ் காவலர் போட்டித்தேர்வு - திமுக எம்.பி. கனிமொழி கடும் கண்டனம்

x

மத்திய ரிசர்வ் படையின் காவலர் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தி பேசாத மக்களிடம் இந்தியை திணிக்கும் செயலை நிறுத்தி விட்டு, அரசியலமைப்பில் உள்ள 22 மொழிகளிலும் தேர்வு நடத்த வேண்டும் என கனிமொழி தெரிவித்துள்ளார். மேலும் பல மொழியினங்களின் ஒத்துழைப்பில் உருவானதே இந்திய ஒன்றியம் என்பதை பாஜக அரசு மறக்கக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்