மத்திய அரசின் அதிரடி திட்டம்..2030-க்குள் குட் பை..தமிழக அரசின் முடிவு மாற்றத்தை ஏற்படுத்துமா?

x

பேட்டரி, மெத்தனால், எத்தனால் மூலம் இயங்கும் வாகனங்களுக்கு, இனி அனுமதி கட்டணம் இல்லையென்ற அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக விளக்குகிறது இந்த தொகுப்பு....


நிலக்கரி, பெட்ரோல், டீசல், கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களால், அதிகளவில் கார்பான் டை ஆக்ஸைடை வெளியாகி சுற்றுச்சூழலை கடுமையாக மாசு படுத்தி வருகிறது.

வேகமாக பாதித்து வரும் பூமியை பாதுகாக்க, உலக நாடுகள் எல்லாம் மாசில்லா போக்குவரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அந்த வகையில், மின்சார வாகனங்கள், மெத்தனாலில் ஓடும் வாகனம், எத்தனாலில் ஓடும் வாகனங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது.

என்ன விலை கொடுத்தேனும், அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளுக்குள் பெட்ரோலில் இயங்கும் வாகனங்களுக்கு குட் பை சொல்லிவிட வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முடிவெடுத்துள்ளன.

இந்தியாவும், மின்சார வாகனங்களை வாங்க மானியம், எத்தனால், மெத்தனாலில் இயங்கும் வாகனங்களுக்கு சலுகைகள் என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு 2030 க்குள் பெட்ரோல் வாகனங்களை முடிவுக்கு கொண்டுவர இலக்கு நிர்ணயித்துள்ளது.

தமிழகத்தை பொருத்தவரை எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பல்வேறு சலுகைகளை அளித்து வந்த நிலையில், தற்போது "பேட்டரி, மெத்தனால், எத்தனால் மூலம் இயங்கும் வாகனங்களுக்கு இனி வாகன அனுமதி கட்டணம் இல்லையென்ற" அதிரடி அரசாணையை வெளியிட்டுள்ளது" தமிழக அரசு.

மத்திய அரசின் விதியை பின்பற்றி, சரக்கு வாகனங்கள் தவிர, 3000 கிலோ எடைக்கு குறைவான வாகனங்களுக்கும் அனுமதி கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது

சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு, மாசில்லா வாகனங்களை வாங்க ஊக்குவிக்கும், தமிழக அரசின்

இந்த முடிவு மக்களிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்