செல்போன் மீது தீராத மோகம்.. 2K கிட்ஸ்-ன் விபரீத யோசனை.. போலீசையே கதிகலங்க வைத்த சிறுவர்கள்

x

செல்போன் வாங்க பெற்றோரிடம் பணம் பறிக்க, சிறுவர்கள் கடத்தல் நாடகம் ஆடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூரை சேர்ந்த 7ஆம் வகுப்பு படிக்கும் சிறுவனை, 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் கடத்தி வைத்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. கடத்தப்பட்ட சிறுவனின் பெற்றோரிடம், மற்றொரு சிறுவன் பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் இருவரையும் மறைந்திருந்து மடக்கி பிடித்து காவலர்கள் விசாரித்ததில், செல்போன் வாங்கும் ஆசையில் பணம் பறிக்கும் திட்டத்தில் சிறுவர்கள் ஈடுபட்டது தெரியவந்தது. சிறுவர்கள் என்பதால் அவர்களை எச்சரித்தும், அறிவுரை வழங்கியும் போலீசார் அனுப்பி வைத்ததனர்.


Next Story

மேலும் செய்திகள்