"எந்த நிலைமையில இருக்கோம் தெரியுமா? எங்க பொழப்பே இதுல தான் இருக்கு"திருடியவரிடம் அழுது புலம்பிய பெண்

x

சேலம் பழைய பேருந்துநிலையம் அருகே உள்ள கோட்டை பகுதியில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம், இளைஞர் ஒருவர் திடீரென செல்போனை பறித்து கொண்டு தப்பியோட முயன்றார். அப்போது அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் இளைஞரை மடக்கி பிடித்து சரமாரியாக தர்ம அடி கொடுத்து சேலம் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் பிடிபட்ட இளைஞர் தேவகோட்டை பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பது தெரியவந்தது. இந்நிலையில், திருடிய இளைஞரிடம் பெண் அழுது கொண்டே அவரது குடும்ப சூழ்நிலை குறித்து பேசும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்