செல்போன் தகராறு - பட்டப்பகலில் நடுரோட்டில் பெண்ணை சரமாரியாக தாக்கிய பரோட்டா மாஸ்டர் - வெளியான அதிர்ச்சி வீடியோ
செல்போன் தகராறு - பட்டப்பகலில் நடுரோட்டில் பெண்ணை சரமாரியாக தாக்கிய பரோட்டா மாஸ்டர் - வெளியான அதிர்ச்சி வீடியோ
சாத்தான்குளம் அருகே பெண் ஒருவரை பரோட்டா மாஸ்டர் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவர் பரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவரின் எதிர் வீட்டில் வசித்து வருபவர் ராமலட்சுமி. இவர்கள் பகுதியில் நடைபெற்ற திருவிழாவிற்காக வில்லுப்பாட்டு குழுவினரில், ஒருவரது தொலைபேசி காணாமல் போனதாக கூறப்படுகிறது. அந்த தொலைபேசியை இராமலட்சுமி தான் எடுத்துள்ளார் என கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். கடைசியில் கணேசனின் தாயார் வீட்டில் அத்தொலைபேசி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, இராமலட்சுமியை கணேசன் தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது
Next Story
