துப்பாக்கி, வளர்ப்பு நாயுடன் வலம் வந்த முதியவர் -நாய்களை சுட முயற்சி- சிசிடிவி காட்சி வைரல்

துப்பாக்கி, வளர்ப்பு நாயுடன் வலம் வந்த முதியவர் -நாய்களை சுட முயற்சி- சிசிடிவி காட்சி வைரல்
Published on

குன்னூரில், ஏர்கன் உடன் வலம் வந்த முதியவரின் சிசிடிவி காட்சி வைரலான நிலையில், அவரை எச்சரித்த போலீசார் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூரின் உட்கோட் பகுதியை சேர்ந்த ஜேம்ஸ் என்பவர் அண்மையில் துபாயிலிருந்து சொந்த ஊருக்கு வந்ததாக கூறப்படுகிறது. இவர் கையில் துப்பாக்கியுடன் வலம் வந்ததுடன், தனது நாயை பார்த்து குரைக்கும் நாய்களையும் சுட முயற்சித்த சிசிடிவி காட்சி வைரலானது. இதுதொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் விளையாட்டு பொருட்கள் கடையில் இருந்து ஏர் கன் வாங்கியது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார், முதியவரை எச்சரித்து சென்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com