குடிநீரில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரம் - 5வது நாளாக தொடரும் தீவிர விசாரணை...

x

குடிநீரில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணையை துரிதமாக மேற்கொள்வார்கள் என்பதால் தான் வழக்கு மாற்றப்பட்டதாக திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர் தெரிவித்துள்ளார்.


புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித கழிவுகள் கலந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், சிபிசிஐடி தரப்பில் 35 பேர் கொண்ட 10 தனிப்படைகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...


50க்கும் மேற்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.


இந்நிலையில், நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு தில்லை நடராஜன் தனிப்படையின் நடவடிக்கைகள் குறித்து டிஎஸ்பி பால்பாண்டி உள்ளிட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.


இன்று சம்பந்தப்பட்ட வெள்ளனூர் காவல் நிலையத்தில் அதிகாரி தில்லை நடராஜன், திருச்சி சரக சட்டம் ஒழுங்கு டிஐஜி சரவணன் சுந்தர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.


தொடர்ந்து இறையூர் கிராமத்தில் சிபிசிஐடி போலீசார் 5வது நாளாக விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்