டீச்சர்கள் கண் முன்னே துடிதுடிக்க பறிபோன 4 மாணவிகள்.. உடலை கட்டிப்பிடித்து கதறிய தந்தைகள்

x
 • விளையாட்டு போட்டிக்கு சென்ற சிறுமிகள் 4 பேரை தண்ணீருக்கு காவு கொடுத்து விட்டு கதறிக் கொண்டிருக்கிறது அவர்களின் குடும்பம்...
 • பெற்ற பிள்ளைகள் கோப்பைகளோடு வருவார்கள் என எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு கண்ணீரும் அதிர்ச்சியும் தான் மிச்சமாகி இருக்கிறது...
 • புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே பிலிப்பட்டி கிராமத்தில் அரசு ஊராட்சிய ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
 • இந்த பள்ளியில் படித்து வந்தவர்கள் தான் லாவண்யா, இனியா, சோபியா, தமிழரசி...
 • 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை படித்து வந்த மாணவிகள் மாநில அளவிலான விளையாட்டு போட்டிக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
 • திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த செவ்வாய் கிழமை மாநில அளவிளான விளையாட்டு போட்டிகள் நடந்த சூழலில் புதுக்கோட்டையை சேர்ந்த 13 மாணவிகள் பங்கேற்றனர்.
 • பள்ளி ஆசிரியர்களான இப்ராஹிம் மற்றும் திலகவதி ஆகிய இருவரின் மேற்பார்வையில் போட்டியில் கலந்து கொண்ட மாணவிகள் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர்.
 • அப்போது, கரூர் மாவட்டம் மாயனூர் அருகே வந்து கொண்டிருந்த மாணவிகளின் வாகனம் மாயனூர் அணைப்பகுதியை சுற்றி பார்ப்பதற்காக நிறுத்தப்பட்டுள்ளது.
 • இதில், ஆசிரியர்களுடன் மாயனூர் அணையை சுற்றி பார்த்த மாணவிகள், மாயனூர் அணையின் காவிரி ஆற்றங்கரையில் இறங்கி குளிக்க ஆரம்பித்துள்ளனர்.
 • இந்த சம்பவத்தில் 13 மாணவிகளும் ஒரே நேரத்தில் ஆற்றில் இறங்கி மகிழ்ச்சியாக விளையாண்டனர்.
 • அப்போது மாணவிகளுடன் ஆசிரியர்களும் ஆற்றில் இறங்கியதாக கூறப்படுகிறது.
 • ஒரு கட்டத்தில் ஆற்றின் ஆழமான பகுதிக்கு அவர்கள் செல்லவே, திடீரென தண்ணீர் அவர்களை உள்நோக்கி இழுத்தது.
 • இதில் கிருத்திகா என்ற மாணவி சில மாணவிகளை பிடித்து கொண்டே ஆசிரியரை நோக்கி கூச்சலிட்டுள்ளனர்.
 • ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் சோபியா, தமிழரசி, இனியா மற்றும் லாவண்யா ஆகிய நால்வரும் ஆற்றில் முழ்கி உயிரிழந்துள்ளனர்.
 • இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனே, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் 4 மாணவிகளையும் சடலமாக மீட்டனர்...
 • நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவத்தை அறிந்த மாணவிகளின் பெற்றோர் நிலை குலைந்து போயினர்
 • . உடனே மாணவிகள் படித்த பள்ளி முன்பு பெற்றோர்கள் குவிந்த நிலையில், அதிர்ச்சியடைந்த நிர்வாகம் உடனே பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தது...
 • மாயனூர் அணைப் பகுதியின் காவிரி ஆற்றில் சில பகுதிகள் தடைசெய்யப்பட்ட பகுதி எனவும், மாணவிகளும், ஆசிரியர்களும் வெளியூர் என்பதால் அறியாமல் ஆற்றில் இறங்கியதில் 4 மாணவிகளின் உயிரையும் காவு வாங்கியது காவிரி..
 • உடனே, சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில் உயிரிழந்த ஒவ்வொரு மாணவிக்கும் தலா 2 லட்சம் இழப்பீடு வழங்குவதாக முதலமைச்சர் அறிவித்தார்.
 • இதனிடையே, உயிரிழந்த மாணவிகளின் உடல் கரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், மாணவியின் உடலைக்கண்டு பெற்றோர் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் காண்போரை கலங்க செய்தது.
 • இந்த சூழலில் பள்ளியின் தலைமையாசிரியர் பொட்டுமணி, மாணவிகளை அழைத்து சென்ற ஆசிரியர்களான இப்ராஹிம் மற்றும் திலகவதி ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
 • இந்நிலையில், உயிரிழந்த மாணவிகளின் பெற்றோர் மருத்துவமனைக்கு வருவதற்குள்ளே மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதால் மாணவிகளின் உடலை வாங்க மறுத்து பெற்றோர் போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்