சாதி பெயரை சொல்லி தாக்குதல்... சமூக வலைதளத்தில் பரவும் தம்பதியின் வீடியோ

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சாதி பெயரை சொல்லி தாக்கிய 3 பேர் கொண்ட கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதிய தம்பதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குமந்தாபுரம் கிராமத்தை சேர்ந்த சௌந்தராஜனின் மனைவி வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.

அதில், கடைக்கு சென்று வீடு திரும்பிய தனது கணவர், வாகனத்தில் இருந்து கீழே தள்ளி, காலனியால் அடித்து அவமானப்படுத்தப்பட்டதாகவும், முதலமைச்சர் தலையிட்டு தங்களுக்கு நீதி கிடைக்க செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com