பிரபல தொகுப்பாளருக்கு கொலை மிரட்டல் - டிடிஎப் வாசன் மீது வழக்குபதிவு

x

பிரபல யூடியூபர் குறித்து தரக்குறைவாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக யூடியூபர் டிடிஎப் வாசன் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் கோவை காரமடை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

யூடியூபர் டிடிஎப் வாசன் சமீபத்தில் யூடியூப்பில் பேசி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பேசு பெருளானது. அதில், யூடியூப் சேனல் ஒன்றின் பிரபல தொகுப்பாளர் குறித்து தரக்குறைவாகவும், கொலை மிரட்டல் விடுக்கும் தொணியிலும் டிடிஎப் வாசன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில், யூடியூபர் குறித்து தரக்குறைவாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக டிடிஎப் வாசன் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் கோவை காரமடை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், டிடிஎப் வாசன் தரக்குறைவாக பேசியுள்ள யூடியூப் தொகுப்பாளரின் நேர்காணலுக்கு சில மாதங்களுக்கு முன்பு டிடிஎப் வாசன் சென்றதும், அப்போது கருத்துவேறுபாடு ஏற்பாட்டு பாதியிலே டிடிஎப் வாசன் வெளியேறியதும் குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்