ஈபிஎஸ் மீதான வழக்கு.. முதற்கட்ட விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

x

ஈபிஎஸ் மீதான தேர்தல் வழக்கில் முதற்கட்ட விசாரணை அறிக்கையை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சேலம் முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

தேனி மாவட்டத்தை சேர்ந்த மிலானி என்பவர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது சேலம் 1 வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தனிநபர் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் தகவல்களை மறைத்து ஈபிஎஸ் பொய்யான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ததாக குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் இது தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சேலம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்