வெடிமருந்துகளுடன் 13 பேர் சிக்கிய வழக்கு...3 இலங்கை தமிழர்கள் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிப்பு

x

வெடிமருந்துகளுடன் 13 பேர் சிக்கிய வழக்கு...3 இலங்கை தமிழர்கள் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிப்பு

வெடி மருந்துகளுடன் பிடிபட்ட வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜாராகாமல் இருந்த இலங்கை தமிழர்கள் 3 பேர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். சென்னை பெரியமேட்டில் 2007 ஆம் ஆண்டு கியூ பிரிவு போலீசார் 13 பேரை மடக்கி பிடித்து சோதனை செய்து, ஏழரை டன் வெடிகுண்டுகள் தயாரிக்கும் மூல பொருட்களை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள வெடிகுண்டு வழக்குகள் விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. ஜாமினில் வெளியே வந்து வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வரும் நிதி, யோக ராஜா, பாரதிதாசன் ஆகியோரை தேடப்படும் குற்றவாளிகளாக பூந்தமல்லி வெடிகுண்டு வழக்குகள் விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்