முதலமைச்சரை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்ட வழக்கு - கிஷோர் கே சாமி புழல் சிறையில் அடைப்பு

x

முதலமைச்சரை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்ட வழக்கில், டிசம்பர் 5ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி நிதித்துறை நடுவர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கில், 4 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் புதுச்சேரியில் பதுங்கி இருந்த கிஷோர் கே சாமியை போலீசார் சென்னை மத்திய குற்ற பிரிவு போலீசார் கைது செய்தனர்.

பின்னர் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். விசாரணை மேற்கொண்ட குற்றவியல் நிதித்துறை நடுவர் கிரிஜா ராஜன், கிஷோர் கே சாமிக்கு டிசம்பர் 5ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டார்.

இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்