பிரபல பாம்பே சர்க்கஸ் நிறுவனத்தின் மீது வழக்கு...நாய் மற்றும் கிளிகளை துன்புறுத்துவதாக புகார்...

x

கோவை

பிரபல பாம்பே சர்க்கஸ் நிறுவனத்தின் மீது வழக்கு...

நாய் மற்றும் கிளிகளை துன்புறுத்துவதாக புகார்...

கொண்டாடமாக தொடங்கப்பட்ட சர்க்கஸ் நிகழ்ச்சி...

வழக்கு தொடுத்த விலங்கு நல அமைப்பால் தடை...

பிரபல சர்க்கஸ் நிறுவனத்தின் பகீர் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அங்கு விலங்குகள் துன்புறுத்தப்பட்டது உண்மையா?

90ஸ் கிட்ஸ் வாழ்கையில மறக்க முடியாத ஞாபகங்கள் ஒன்னு சர்க்கஸ்.

மனிதர்கள் செய்யுற அசத்தல் சாகசங்கள் ஒரு பக்கம்னா, அவங்களுக்கு இணையா அட்டம் பாட்டத்துல டஃப் கொடுக்ற அனிமல்ஸ் மற்றொரு பக்கம்.

இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் பல பெரு நகரத்து மக்கள் தொடங்கி, சிறு நகரத்து சிட்டிசன்கள் வரை பல தரப்பு மக்களையும்

தனதுக்கு ரசிகர்களாக மாற்றி வைத்திருந்தது இந்த சர்க்கஸ் தொழில்.

பிரமாண்ட கூடாரத்திற்குள் நுழைந்து விட்டால் நம்மை வேறு ஒரு உலகத்திற்கே அழைத்துச் சென்றுவிடும் மாய சத்தி கொண்ட இந்த சாகச நிகழ்சிக்கு, கடந்த சில வருடங்களாகவே சோதனைக்காலமாக தான் இருந்திருக்கிறது.

விலங்குகளை சர்கஸ்சில் பயன்படுத்துவதற்கு தடை இருப்பதாக கூறி பல காட்டு விலங்குகள் பறிமுதல் செய்யபட்டிருக்கிறது. இதனால் பல சர்க்கஸ் நிறுவனக்கள் தங்கள் கூடாரத்தை ஓரங்கட்டிவிட்ட நிலையில், மிச்ச மீதி இருக்கும் சில கம்பெனிகள் விலங்குகளின் வெற்றிடத்தை

மனிதர்களை கொண்டு நிரப்பி, நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள். ஆனாலும் பழைய அளவுக்கு தற்போது மக்கள் மத்தியில் ஆர்வம் எதுவும் இல்லை என்றே சொல்லப்படுகிறது.

தற்போது ஒரு சில கம்பனிகள் மட்டும் பெரு நகரங்களில் தங்கள் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.

காட்டுவிலங்குகளுக்கு விடை கொடுத்துவிட்டு, வளர்ப்பு பிராணிகளை மட்டுமே களத்தில் வைத்து எதிர் நீச்சல் அடிக்கும் நிலைக்கு சர்க்கஸ் கலைஞர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

அப்படி ஒரு சில வாரங்களுக்கு முன்பு கோலாகலமாக தொடங்கப்பட்ட ஒரு சர்க்கஸ் நிகழ்ச்சி மீது தற்போது வழக்கு பதிவு செய்யபட்டிருக்கிறது.பிரபல பாம்பே சர்க்கஸ் நிறுவனத்தின் மீது வழக்கு...நாய் மற்றும் கிளிகளை துன்புறுத்துவதாக புகார்...

கோவை வ.உ.சி மைதானத்தில் கடந்த 23 ஆம் தேதி பிரபல பாம்பே சர்க்கஸ் நிகழ்ச்சி ஆரவாரமாக தொடங்கியிருக்கிறது. நாள் ஒன்றுக்கு மூன்று காட்சிகளை அவர்கள் நடத்தி வந்திருக்கிறார்கள்.

இந்நிலையில் PEOPLE FOR CATTLE IN INDIA என்ற விலங்குகள் அமைப்பு பாம்பே சர்க்கஸ் மீது காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறது.

பாம்பே சர்க்கஸ்ஸில் நாய்கள், கிளிகளை வளர்பதற்கான முறையான அனுமதி பெறவில்லை என்றும், அதோடு அங்கு வளர்க்கபடும் விலங்குகளுக்கு சரியாக உணவு கொடுக்காமல் பட்டினி போடுவதாக அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தனர்.

ஏற்கனவே வீடுகளில் பச்சை கிளிகள் வளர்ப்பதற்கு விதிக்கபட்ட தடை உத்தரவை பல இடங்களில் வனத்துறையினர் மின்னல் வேகத்தில் செயல்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சர்க்கஸ் நிறுவனத்தின் மீது இப்படி ஒரு புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் மிருகவதை சட்டம் உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர். இதுகுறித்து சர்க்கஸ் நிறுவனத்தின் மேலாளர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்