சன்னி லியோன் மீது வழக்கு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு | Sunny Leone | Kerala HC

x

நடிகை சன்னி லியோன் மீதான மோசடி வழக்கின் விசாரணைக்கு இரண்டு வாரங்களுக்கு தடை விதித்து, கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலிவுட் நடிகை சன்னி லியோன், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தார். ஆனால், அந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளின்படி அந்த நிகழ்ச்சியில் சன்னி லியோனால் பங்கேற்க முடியவில்லை. அதனால் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த ஷியாஸ் குஞ்சுமுகமது என்பவர் அளித்த புகாரின் பேரில், மாநில குற்றப்பிரிவு போலீசார் சன்னி லியோன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் மாநில குற்றப்பிரிவு பிரிவு போலீசார் தனக்கு எதிராக தாக்கல் செய்த எஃப்ஐஆரை ரத்து செய்யக் கோரி, கேரள உயர் நீதிமன்றத்தில் சன்னி லியோன் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவை விசாரித்த நீதிபதி ஜியாத் ரஹ்மான்,சன்னி லியோன் மீதான மோசடி வழக்கின் விசாரணைக்கு 2 வாரங்களுக்கு தடை விதித்தார். அதோடு குற்றப்பிரிவு அதிகாரிகளிடம் நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்