இலவசத் திட்டங்களுக்கு எதிரான வழக்கு.. திமுக மீது உச்சநீதிமன்றம் விமர்சனம்

x

இலவச திட்டங்களை வாக்குறுதியாக அளிப்பதற்கு எதிரான வழக்கில், திமுக மட்டும்தான் அறிவார்ந்த கட்சி என நினைத்து கொள்ள வேண்டாம் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி விமர்சித்திருக்கிறார்.

அரசியல் கட்சிகள் இலவச திட்டங்களை வாக்குறுதிகளாக அறிவிப்பதற்கு எதிராக பாஜகவை சேர்ந்த அஸ்வினி குமார் உபாத்யா தாக்கல் செய்த பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் ஆம் ஆத்மியும், திமுகவும் இடையூட்டு மனுவை தாக்கல் செய்தன. சமூகத்தில் பின்தங்கிய மக்களை மேம்படுத்தும் திட்டங்கள் இலவசங்கள் அல்ல நலத்திட்டம் என வாதிட்ட திமுக, மத்திய அரசு செல்வாக்குள்ள தொழிலதிபர்கள் செலுத்தாத வங்கி கடன்களை தள்ளுபடி செய்திருக்கிறது என்ற வாதத்தை முன்வைத்தது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு முன்பு செவ்வாய் கிழமை மீண்டும் நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்