பெண் திமுக கவுன்சிலர் மீது பாய்ந்த வழக்கு
சென்னையில் தொழிலதிபரை காரில் கடத்திச் சென்று 25 கோடி மதிப்பிலான நிலத்தை 60 லட்ச ரூபாய்க்கு மிரட்டி எழுதி வாங்கிய கும்பல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை சோழிங்கநல்லூரை சேர்ந்தவர் அமர்ராம். இவருக்கும் திமுக வட்டசெயலாளரான கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது சகோதரர் மனோகரன் என்பவருக்கும் நிலத்தகராறு இருந்துள்ளது. இந்நிலையில், அமர்ராமை , கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது சகோதரர் மனோகரன் ஆகியோர் காரில் கடத்தி சென்று, நிலத்தை எழுதிகொடுக்க சொல்லி வற்புத்தியதாக தெரிகிறது. இது தொடர்பான அமர்ராம் அளித்த புகாரின் அடிப்படையில், திமுக வட்டசெயலாளர் கிருஷ்ணமூர்த்தி, அவரது மனைவி திமுக கவுன்சிலர் விமலா உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரித்து வருகின்றனர்.
