கார் திருட்டு.. கைரேகை வைக்க சொன்ன போலீசாரை சரமாரி தாக்கிய 4 இளைஞர்கள் - அதிர்ச்சி சம்பவம்

x

கேரள மாநிலம் பெரும்பாவூர் பகுதியில், கைரேகை பதிவு செய்ய மறுத்த இளைஞர்கள், காவல் நிலையத்துக்குள் காவலரை தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரும்பாவூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார், அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். ஆவணங்களை கேட்ட போது, காரில் இருந்த இளைஞர்கள் நான்கு பேர், முன்னுக்கு பின் முரணாக பேசியதாக தெரிகிறது. அவர்களை குருப்பம்பாடிகாவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், குருப்பம்பாடியில் காரை திருடிக் கொண்டு பெங்களூருவுக்கு தப்பிச் செல்ல முயன்றது கண்டறியப்பட்டது. பின்னர், கைரேகையை பதிவு செய்யுமாறு காவல் துணை ஆய்வாளர் ரின்சன் தாமஸ் கூறிய நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்த இளைஞர்கள், அவரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதை தடுக்க முயன்ற பிற காவலர்களையும் இளைஞர்கள் தாக்கியதாக தெரிகிறது. இதையடுத்து, குருப்பம்பாடி காவல் நிலையத்துக்கு வந்த உயர் அதிகாரிகள், இளைஞர்களை பிடித்து வேறு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்