நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த தாசில்தார் சென்ற கார் - பதைபதைப்பு காட்சிகள்

x

நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த தாசில்தார் சென்ற கார் - பதைபதைப்பு காட்சிகள்


நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஏ.கே.சமுத்திரம் பகுதியில், ராசிபுரம் வட்டாட்சியர் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. ராசிபுரம் வட்டாட்சியர் கார்த்திக்கேயன், காரில் மகனுடன் கோயிலுக்கு சென்று விட்டு திரும்பியுள்ளார். அப்போது ஏ.கே.சமுத்திரம் பிரிவு அருகே, எதிர்பாராதவிதமாக கார் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக கார்த்திக்கேயன் மற்றும் அவரது மகன் கீழே இறங்கியதால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைப்பதற்குள் அதற்குள் கார் முற்றிலும் எரிந்து சேதமானது.


Next Story

மேலும் செய்திகள்