ஓடிக்கொண்டிருந்த காரில் பயங்கர புகை.. திடீரென பிடித்த 'தீ'-யால் விபரீதம்...

x

ஓடிக்கொண்டிருந்த காரில் பயங்கர புகை.. திடீரென பிடித்த 'தீ'-யால் விபரீதம்...


ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே சாலையில் சென்றுக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு நிலவியது. பவானியில் இருந்து பர்கூர் நோக்கி சொகுசு காரில், சுப்பிரமணி ராஜேந்திர சுவாமிகள் என்பவர் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, காரின் முன்பகுதியில் இருந்து புகை வருவதை கண்ட அவர் உடனடியாக காரை விட்டு இறங்கினார். பின்னர், சிறிது நேரத்தில் கார் தீ பிடித்து எரியத் தொடங்கியது. தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை ஆணைத்தனர்.இதனால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்