புதிய நான்கு வழிச்சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார் ...-

x

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புதிய நான்கு வழிச்சாலையில் திடீரென கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோபால் மற்றும் ராஜகணேஷ் ஆகிய இருவரும் கரூர் மாவட்டம் தோகைமலையில் இருந்து காரில் அரியலூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது திருச்சி-சிதம்பரம் புதிய நான்கு வழிச்சாலையில் லால்குடி அருகே சென்று கொண்டு இருந்த போது காரில் இருந்து பெட்ரோல் வாடை வந்ததை இருவரும் உணர்ந்தனர். இந்நிலையில், திடீரென கார் தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து, காரில் இருந்து இருவரும் உடனடியாக வெளியேறியதால் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்