கோவையில் கார் சிலிண்டர் வெடித்த விவகாரம் - சென்னை என்ஐஏ அலுவலகத்தில் முதல் வழக்காக பதிவு

x

கோவையில் கார் சிலிண்டர் வெடித்த விவகாரத்தை, தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்ற முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை செய்திருந்தார்.

அதை ஏற்று என்ஐஏவுக்கு மத்திய அரசு பரிந்துரைத்த‌து.

இதையடுத்து, சென்னையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள என்ஐஏ காவல் நிலையத்தில் முதல் வழக்காக, கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுவரை தமிழகம் முழுவதும் டெல்லி, கொச்சி ஹைதராபாத்தில் இருந்து அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை நடத்திய நிலையில், தற்போது என்ஐஏ சென்னை அலுவலகத்திலேயே கண்காணிப்பாளர் ஸ்ரீஜித் தலைமையிலான அதிகாரிகள் இந்த வழக்கை விசாரிக்க உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்