ஓடையில் கார் விழுந்து விபத்து... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

x

சித்திபேட்டை மாவட்டத்தில் உள்ள முனிகடப்பா கிராமத்தில், கால்வாயில் அந்த கார் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், காரில் வந்த 6 பேரில், 3 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயம் அடைந்தார். தகவல் அறிந்து வந்த சித்திபேட்டை போலீசார், காயமடைந்தவரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காரில் வந்தவர்கள், பி.பி. நகர் கிராமத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்