"10-ம் வகுப்பு மதிப்பெண் எடுத்துக்க முடியாது" - அதிர்ச்சியில் கொரோனா batch

x

பொறியியல் மாணவர் சேர்க்கை விதிமுறைகளில் மாற்றம் செய்து உயர்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வில், மாணவர்கள் ஒரே மாதிரியான தரவரிசை மதிப்பெண்களை பெறும்போது ரேண்டம் எண்கள் பயன்படுத்தப்படுகின்றன. ரேண்டம் என் கணக்கீடு வரிசையில், பத்தாம் வகுப்பு மதிப்பெண்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. கடந்த 2021- 22 ஆம் கல்வியாண்டில், கொரோனா காரணமாக 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வில் 10ம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என உயர் கல்வித் துறை வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரவரிசை மதிப்பெண், இயற்பியலில் பெற்ற மதிப்பெண், விருப்ப பாடத்தில் பெற்ற மதிப்பெண், பொறியியல் சேர்க்கைக்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி, பிறந்த தேதி ஆகிய அனைத்திலும் ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே நிலையில் இருக்கும்போது, கடைசியாக ரேண்டம் எண் பயன்படுத்தப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்