"தண்ணீர் இல்லாமல் ஒரு வேலையும் செய்ய முடியவில்லை" - மெட்ரோ லாரிகள் ஸ்ட்ரைக்கால் மக்கள் அவதி

x

லாரிகளுக்கு போதிய தண்ணீர் வழங்கவில்லை என சென்னையில் நாளை முதல் மெட்ரோ லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளன.

இதனால் கோடம்பாக்கம், தி.நகர், இராஜ அண்ணாமலை புரம், மந்தைவெளி, கிரீன்வேஸ் சாலை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில், தண்ணீர் விநியோகம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 428 லாரிகளில் ஓட்டல், பேக்கரி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வணிக ரீதியாக செயல்படும் லாரிகளின் உரிமையாளர்கள் மட்டுமே வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.

ஏற்கனவே மந்தைவெளி, இராஜ அண்ணாமலை புரம், மந்தைவெளி, கிரீன்வேஸ் சாலை ஆகிய பகுதிகளில் 4வது நாளாக இன்றும் குழாய் மூலம் தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

இப்பகுதிகளில் லாரிகள் வேலை நிறுத்ததால் நிலைமை மேலும் மோசமாகும் நிலை உள்ளது.

4வது நாளாகத் தண்ணீர் வராததால் வீட்டில் உணவு சமைத்தல், அடிப்படைத் தேவைகளுக்குக் கூட தண்ணீர் இன்றி மக்கள் தவித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்