பிரபல ஷாம்பு நிறுவனத்தின் பொருட்களால் கேன்சர் - கிளம்பிய புதிய புயல்

x

அமெரிக்காவில் லோரியல் நிறுவனம் தயாரிக்கும் பொருட்களைப் பயன்படுத்தியதன் விளைவாக கருப்பை புற்றுநோய் உருவாகியதாக மிசோரி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜெனிஃப்பர் மிட்செல் என்ற பெண், லோரியல் நிறுவனத்திற்கு எதிராக சிகாகோவில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர், 2000ம் ஆண்டு முதல் லோரியலின் தயாரிப்புகளைப் பயன்படுத்துவதாகவும், அதன் விளைவாக அவருக்கு கருப்பை புற்றுநோய் உருவாகியுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

சமீபத்தில் என்.ஐ.ஈ.எச்.எஸ் நடத்திய ஆய்வில், முடியை நேராக்கும் பொருட்களை அடிக்கடி பயன்படுத்துபவர்களிடையே கருப்பை புற்றுநோயின் அபாயம் கணிசமாக அதிகரிக்கக்கூடும் என கண்டறியப்பட்டு உள்ளது.

இந்நிலையில், ஜெனிஃப்பர் தொடர்ந்துள்ள வழக்கில், தனக்கு லோரியல் நிறுவனம் நஷ்டஈடு தொகை வழங்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்