கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உரை - இலங்கை கண்டனம்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உரை - இலங்கை கண்டனம்
Published on

2009ம் ஆண்டு விடுதலை புலிகளுடனான இறுதிக்கட்ட போரை இனப்படுகொலை எனக்கூறிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு இலங்கை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இறுதிக்கட்ட போரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இப்போரின் 14வது ஆண்டு நினைவு தினம் கனடாவில் அனுசரிக்கப்பட்ட நிலையில், அதில் கலந்து கொண்டு பேசிய ட்ரூடோ, மே 18ம் தேதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக நாடாளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளதாகவும், இந்த மோதலில் பாதிக்கப்பட்டவர்கள் உரிமைகளுக்காகவும், இலங்கையில் தொடர்ந்து கஷ்டங்களை எதிர்நோக்கும் அனைவருக்காகவும் கனடா வாதிடுவதை நிறுத்தாது என்றும் கூறினார். இதனால் கடும் ஆத்திரம் அடைந்த இலங்கை, கண்டனம் தெரிவித்ததுடன், இலங்கைக்கான கனடா தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. மேலும், கனடா தலைவரின் இத்தகைய பொறுப்பற்ற அறிவிப்புகள், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கு பதிலாக கனடாவிலும் இலங்கையிலும் நல்லிணக்கத்தையும், வெறுப்பையும் வளர்ப்பதாக இலங்கை கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com