தமிழக பெட்ரோல் பங்கில் ரூ.2000 நோட்டுகள் வாங்கப்படுமா? - வெளியான முக்கிய தகவல்

x

பெட்ரோல் பங்குகளில் வழக்கம் போல் 2000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படும் என பெட்ரோலிய வணிகர் சங்கம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், 2000 ரூபாய் நோட்டை கொடுத்துவிட்டு 100 ரூபாய்க்கு பெட்ரோல் போடுவதால் சில்லரை தட்டுப்பாடு ஏற்படுவதாக பெட்ரோலிய வணிகர் சங்கத் தலைவர் முரளி தெரிவித்துள்ளார். இதனால், பெட்ரோல் பங்குகளுக்கு உரிய சில்லறைகளை கொடுக்க, மற்ற வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டால், 2000 ரூபாய் நோட்டுக்கள் வாங்குவதில் எந்த சிக்கலும் இருக்காது என வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்