பைக்கில் சென்றவரின் கழுத்தில் சிக்கிய கேபிள் வயர்... சாலையில் விழுந்ததில் பைக் ஓட்டியவர் படுகாயம் - பரபரப்பு காட்சி

பைக்கில் சென்றவரின் கழுத்தில் சிக்கிய கேபிள் வயர்... சாலையில் விழுந்ததில் பைக் ஓட்டியவர் படுகாயம் - பரபரப்பு காட்சி
Published on

கேரள மாநிலம் கொச்சியில், அனில்குமார் என்பவர் தனது பணியை முடித்துவிட்டு பைக்கில் வீடு திரும்பியுள்ளார்.

அப்போது சாலையில் தொங்கி கொண்டிருந்த கேபிள் வயர், அனில் குமாரின் கழுத்தில் சிக்கியது.

இதனால் கட்டுப்பாட்டை இழந்து அனில் குமார் தூக்கி வீசப்பட்ட நிலையில், அவரது தலை மற்றும் விலா எலும்புகளில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அங்கிருந்தவர்கள் அனில்குமாரை மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com