"அமைச்சரவை விரிவாக்கம்..." - டி.கே.சிவக்குமார் சொன்ன பதில்

x

தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் காங்கிரஸ் நிறைவேற்றும் என கர்நாடக துணை முதலமைச்சர் ஆக பொறுப்பேற்கவுள்ள டி.கே.சிவக்குமார் கூறி உள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், மக்கள் மற்றும் தொண்டர்கள் ஆசிர்வாதத்துடன் ஆட்சி அமைந்துள்ளதாகவும், காங்கிரஸ் மேலிடத்துடன் கலந்து ஆலோசித்த பின்னர் உடனடியாக அமைச்சரவை விரிவாக்கம் இருக்கும் என்றும் கூறினார். முதல் அமைச்சரவையிலேயே காங்கிரஸ் அளித்திருந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்