ஷ்ரத்தா கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம்..சிக்காது சுத்தலில் விடும் முக்கிய பொருள் - குழம்பும் போலீஸ்

x

டெல்லியில் இளம்பெண் ஷ்ரத்தா அவரது காதலரலால் வெட்டி வீசப்பட்ட வழக்கில், உடலை வெட்ட பயன்படுத்தப்பட்ட பயங்கர ஆயுதங்கள் சிக்கியுள்ளன.

டெல்லியில் இளம்பெண் ஷ்ரத்தா அவரது காதலர் அப்தாப்பால் கொலை செய்யப்பட்டு, உடல் 35 துண்டுகளாக வீசப்பட்ட வழக்கில் டெல்லி போலீஸ் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

வழக்கில் முக்கிய நகர்வாக ஷ்ரத்தாவின் உடலை துண்டு துண்டாக வெட்ட அப்தாப் பயன்படுத்திய ஆயுதங்கள் போலீசிடம் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

அப்தாப் பயன்படுத்திய 5 பெரிய கத்திகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்றும் ஆனால் அவர் பயன்படுத்திய ரம்பத்தை இன்னும் கண்டுபிடிக்கவில்லை எனவும் போலீஸ் தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. அப்தாப் பிளாட்டில் இந்த ஆயுதங்கள் சிக்கியிருப்பதாகவும், அவை தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டு இருப்பதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்