க்யூஆர் கோட் மூலம் பஸ் டிக்கெட் - கேரளாவில் புதிய திட்டம் அறிமுகம்

கேரள அரசு பேருந்துகளில், டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம், பயணச்சீட்டு பெறும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், இந்த திட்டத்தை போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆண்டனி ராஜூ தொடங்கி வைத்துள்ளார்.

இனி பேருந்துகளில் வைக்கப்பட்டுள்ள க்யூ.ஆர். கோடை பயன்படுத்தி, பயணிகள் பயணச்சீட்டிற்கான பயணத்தை செலுத்த முடியும்.

இதனிடையே, முதற்கட்டமாக திருவனந்தபுரம் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டம், மக்கள் வரவேற்பை பொறுத்து, மாநிலம் முழுமைக்கும் விரிவுப்படுத்தப்படும் என, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com