அசுரவேகத்தில் செல்லும் பேருந்து - பின்னாடி தொங்கிச்செல்லும் மாணவர்கள்

x

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, ஆபத்தை உணராமல் தனியார் பேருந்தின் பின்புறம் தொங்கியபடி மாணவர்கள் சென்றனர். புதுக்கோட்டையில் இருந்து கொடும்பாளுர் வழியாக மணப்பாறை சென்ற தனியார் பேருந்தில், ஆபத்தை உணராமல் தொங்கியபடி மாணவர்கள் சென்றனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, காலை, மாலை என இரு வேளைகளிலும் கூடுதலாக அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்