கல்லூரி மாணவி கையில் ஏறி இறங்கிய பேருந்து..பேருந்தில் ஏற முயன்றபோது,பேருந்தை எடுத்த‌தால் விபத்து..

x

செங்கல்பட்டு அருகே அரசு பேருந்தின் சக்கரம் ஏறியதில், கல்லூரி மாணவி படுகாயமடைந்தார். செங்கல்பட்டை அடுத்த மெய்யூர் இந்திரா நகரை சேர்ந்தவர் கீர்த்தனா. இவர், அரசுப் பேருந்தின் முன்பக்க படியில் ஏற முயன்றபோது, ஓட்டுநர் பேருந்தை எடுத்த‌தாக கூறப்படுகிறது. இதனால் கீர்த்தனா தவறி விழுந்ததும், இடது கை மீது பேருந்தின் சக்கரம் ஏறியது. படுகாயமடைந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஓட்டுநரின் அலட்சியத்தால் விபத்து ஏற்பட்டதாக குற்றம் சாட்டிய பொதுமக்கள், பள்ளி, கல்லூரி நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்