பேருந்து ஓட்டுநர் - சுங்கச்சாவடி ஊழியர்கள் வாக்குவாதம் ...பரனூர் சுங்கச்சாவடியில் பரபரப்பு

x

பரனூர் சுங்கச்சாவடியில், அரசு பேருந்து ஓட்டுநருக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே, கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டில் இருந்து திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கசாவடியில் வைத்திருந்த தடுப்பை உடைத்து சென்றதாக தெரிகிறது. இந்நிலையில், அரசு பேருந்து ஓட்டுநரிடம் சுங்கச்சாவடி ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், சுங்கச்சாவடியில் அரை மணிநேரமாக வாகனங்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்